"வாருங்கள் வடம் பிடிப்போம்.வரலாற்றில் இடம் பிடிப்போம்."

செவ்வாய், 8 மே, 2012

மனவளம் குன்றிய குழந்தைகளின் கல்விப் பயிற்சி









நமது பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தாயுள்ளம் கொண்ட ஆசிரியைகள் சிறப்புக் கல்விகற்பிக்கும் காட்சிகள். சாதாரன குழந்தைகளை பராமரிப்பதைவிட மனவளம் குன்றிய இந்த குழந்தைகளை பேணி வளர்க்க மிகுந்த பாச உணர்வும், சகி்ப்புத்தன்மையும் அவசியம். நல்ல குழந்தைகளையே தவிக்க விட்டுவிடும் பெற்றோர்களுக்கிடையே மிக குறைந்த சம்பளத்தில் மிக உயர்ந்த ஈக உணர்வுடன் செயலாற்றும் எங்கள் பள்ளி ஆசிரியைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பிறந்தநாள்விழா!





நமது பள்ளியின் வளர்ச்சியிலும், தமிழ்மீது தீராத பற்றும் கொண்ட நமது நண்பர் தனது பிறந்தநாள் விழாவை நமது பள்ளி மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் குழந்தைகளுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி நம்மை நெஞ்சம் நெகிழச் செய்த அவருடைய பிறந்தநாளில் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.

புரவலர் வருகை! பள்ளிக்கு பெருமை!!














கடந்த கல்வி ஆண்டில் நமது பள்ளிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ரவிசங்கர் தியான பீடத்தின் சார்பில் நமது குழந்தைகளுக்கு சிறப்பு யோகாசனப் பயிற்சி அளித்தனர். மேலும் கரூர்மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.ராமமூர்த்தி அவர்கள் பள்ளிக்கு வருகைதந்து குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வழங்கினார். மேலும் தமிழ்வழிக் கல்வியின் அவசியம் குறித்தும் தேவை குறித்தும் பேசினார். அவருடன் வழக்குரைஞர்களும், பிற நீதிபதிகளும் வந்திருந்து பள்ளியை சிறப்பித்தனர்.
அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
- க.வெ.காமராசன்
தாளாளர்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

சக்தி தமிழ் பள்ளிக்கூடம் - மாறுபட்ட கல்வி


கரூர் மாவட்டத்தில் 18 ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சக்தி தமிழ் பள்ளிக்கூடம் தமிழ் நாட்டில் முதன் முறையாக தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்க அரசாணை பெற்ற கல்வி நிலையம் ஆகும். அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களைவிட நல்ல மனிதர்களை உருவாக்குவதே தமது கடமை என்று தமிழுக்காகவும் தமிழர் நலன்களுக்காகவும் சேவை செய்து வரும் திரு. சக்தி காமராசன், அவரது மனைவி திருமதி. காமாட்சி அம்மாள் ஆகிய இருவரின் தன்னலமற்ற செயல்பாடுகளை நாம் நிச்சயம் பாரட்ட வேண்டும்.
பள்ளியின் சிறப்புகள் : கல்வி சுமை கிடையாது, தனி பயிற்சி வகுப்புகள் தேவையில்லை, வீட்டு பாடம் கிடையாது, எளிய கற்றல் முறை, ஆக்கவியல் சிந்தனை , வாழ்வியல் நெறிகள், தமிழர் பண்பாட்டுடன் திருக்குறள் நெறி முறைகள், ஆகியன கற்பிக்கபடுகின்றன. ஏழை மாணவர்களுக்கு இலவய கல்வியும், நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு குறைந்த சேவை கட்டணமும் வாங்கி, நல்ல தரமான , அன்பான ஆசிரிய ஆசிரியைகளை கொண்டு அமைதியான சூழலில் பள்ளி சிறப்பாக செயல்படுகின்றது.
நாம் செய்ய வேண்டியது என்ன : நமது இனம் , மொழி, பண்பாடு இவற்றை காக்கவும், நமது பிள்ளைகள் நல்ல சிந்தனையலர்களவும் , சிறந்த மனிதர்களாகவும் வுருவாக தமிழ் வழிக் கல்வி தருவோம். மேலும் நாம் பல்வேறு காரியங்களுக்கு நன்கொடைகள்,உதவிகள் செய்தபோதும், நமது தலையாய கடமையாக கருதி இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தாரளமாக பொருளுதவியும், நிதியுதவியும் செய்து தமிழர்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்த பள்ளிக்கு நன்மை செய்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம். தற்போது மன நலம் குன்றியோருக்கு சிறப்பு பள்ளியும் இலவய சேவையாக நடைபெறுகிறது. அவர்களின் நலனுக்காகவும் பள்ளிக்காகவும் தாராளமாக உதவுங்கள்.

 நன்றி.

 நிதி உதவி செய்ய விரும்புகிறவர்கள் சக்தி தமிழ் பள்ளிக்கூடம், வங்கி கணக்கு : 480781664 இந்தியன் வங்கியில் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு : 9843955627 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது!